குறுஞ்செய்தி அனுப்பி அவள்,
குறியீடும் புன்னகையோ!! ஓர் அழகு!!
குழந்தை என எண்ணி அவள்
கூப்பிடும் பேரழகில்
குறிஞ்சிப்பூ மலரெனவே மனமகிழ்கிறது.
எல்லையில்லா சந்தோசம்,
எத்தனை நாள் ஏக்கம்,
என்னவளின் எண்ணங்களில் நான்!!
என்னவென்று சொல்ல கடவுள் கொடுத்த வரம்தான்!!
சூழ்நிலை சோகங்கள்,வாழ்நிலை காயங்கள் மாற்றவே ஓர்வழி,
தீர்த்திடும் சிறுஒலி,
கண்மணி குறுஞ்செய்தி!!
No comments:
Post a Comment